சமூக வலைத்தளங்களில் பரவிய விஜய் மகன் போலி மதிப்பெண் பட்டியல்

புதன், 24 மே 2017 (18:32 IST)
விஜய் மகன் சஞ்சய் வாங்கியுள்ள 10 ஆம் வகுப்பு மார்க் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.  



இந்நிலையில் தமிழக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான போது, நடிகர் விஜயின் மகன் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கினர்.
 
இது எந்த அளவுக்கு உண்மை என்று விஜய் தரப்பில் உறுதி செய்யாத நிலையில், இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என  தெரியவந்துள்ளது. விஜயின் மகன் சஞ்சய் சி.பி.எஸ்.சி வழிக்கல்வியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதியுள்ளதாகவும்,  அந்த தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகத்தில் இருந்த  விஜய் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்