இப்படத்தில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வருகிற நவம்பருக்குள் இப்படத்தின் அனைத்துக் கட்ட படப்பிடிப்பையும் முடித்து, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் 100 கோடி என்ற பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இப்படம் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது.
இயக்குனர் பரதன், 8 வருடங்களுக்கு பிறகு பைரவா படம் மூலம் மீண்டும் விஜய்யை இயக்குகிறார். சமூக நோக்கமும், கமர்சியலும் கலந்த கலவையாக பைரவா வெளிவர உள்ளது.