இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எஸ்.ஏ சந்திரசேகர் தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை இயக்கத்தைக் கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜய் ரசிகர்கள் மட்டுமே அனைவரும் தொடர்வதாக பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது விஜய் தரப்பில் இதுகுறித்த முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது: அதில்,விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.