விஜய்யா, மகேஷ் பாபுவா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:42 IST)
இந்தியில் அகிரா படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இயக்கும் தமிழ்ப் படம் விஜய் படமாக இருக்கும் என்று வாலண்ட்ரியாக வாய்ஸ் தந்திருக்கிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்.


 
 
இந்நிலையில் தெலுங்குப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து படம் தயாரிக்க வியாபார ஒப்பந்தம் போட்டிருக்கிறார் முருகதாஸ். இவர்கள் இணைந்து தயாரிக்கும் படத்தை முருகதாஸ் இயக்க, மகேஷ் பாபு நடிக்கிறார் என ஆந்திரா அலறுகிறது.
 
இந்த இரண்டில் எது உண்மை? அகிராவுக்கு அடுத்து முருகதாஸ் விஜய்யை இயக்குகிறாரா இல்லை மகேஷ் பாபுவையா?
 
முருகதாஸின் அடுத்த தமிழ்ப் படம் விஜய்யுடன் இருக்கும் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். தமிழ்ப் படம் இயக்கும் முன், மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்குப் படத்தை முருகதாஸ் இயக்குகிறார் என்கின்றன தகவல்கள்.
 
அகிரா முடிந்தால்தான் உறுதியான ஒரு பதில் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்