இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் உள்ள மாசிடோனியாவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் உள்பட பலர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் படக்குழுவினர் சென்னை திரும்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் பஞ்சாயத்து தலைவர், டாக்டர் மற்றும் மேஜிக்மேன் என மூன்று வேடங்களில் நடித்து வரும் விஜய், மூன்றாவது கேரக்டரான மேஜிக்மேன் காட்சிகளின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பினர் தெரிவித்தனர். இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் சமந்தா கலந்து கொள்ளவுள்ளார். சமந்தாவுடன் விஜய் செய்யவுள்ள மேஜிக் காட்சிகள் இதுவரை தமிழ்த்திரையுலகம் பார்த்திராதது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.