ரசிகர்கள் நினைத்தால் விஜய்தான் சி.எம்: பொய் பேசிய பார்த்திபன்

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (20:24 IST)
மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட பார்த்திபன் விஜய்யும் அவரது ரசிகர்களும் சேர்ந்தால் விஜய்தான் இனி சி.எம் என்று கூறியுள்ளார்.


 

 
மெர்சல் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.
 
இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர். நடிகர் தனுஷ், இயக்குநர் பாத்திபன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் கூறியதாவது:-
 
ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இணைந்தால் என்னாகும் என்று தெரியாது. ஆனால் விஜய்யும் அவரது ரசிகர்களும் இணைந்தால் விஜய்தான் இனி சி.எம். அதாவது சி.எம் என்றால் ‘கலெக்‌ஷன் மன்னன்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்