“சர்கார்” ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து “குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்” என விஜய்யை மறைமுகமாக சாடி நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது.
இதனால் விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்தனர். மேலும், கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை உருவாக்கினர். இதனால் கருணாகரன் சிறிது காலம் ட்விட்டரிலிருந்து விலகியும் இருந்தார்.
பின்னர் “நான் பொதுவாக யாரையும் வெறுக்க மாட்டேன். நான் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு விஜய் மிகவும் பிடித்த நடிகர் விஜய். அது அவருக்கும் தெரியும். நான் பயன்படுத்திய வார்த்தைகள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இந்நிலையில் தனியார் இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் கருணாகரன் தளபதி விஜய்யுடன் படங்களில் நடிப்பதற்கு 2 முறை வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை நான் தவறவிட்டேன். எனக்கு முதலில் கிடைத்தது நண்பன் படத்தில் தான். அப்போது, மற்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று. புலி படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு போயிற்று. அதனை நான் பயன்படுத்த தவறிவிட்டேன். இது குறித்து அவரிடம் விஜய்யிடம் கூறியதற்கு கண்டிப்பாக சேர்ந்து பணியாற்றுவோம் நண்பா என்று அவர் கூறினார். எனக்கும் அவருடன் நடிக்க ஆசை தான் என்று கூறியுள்ளார் கருணாகரன்.