விஜய்யின் பைரவாவுக்காக தயாராகும் கோவில் அரங்கு

செவ்வாய், 4 அக்டோபர் 2016 (15:52 IST)
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பைரவா படத்தின் பாடல் காட்சிக்காக பிரமாண்ட கோவில் அரங்கு அமைக்க உள்ளனர்.


 
 
பைரவா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இரு பாடல் காட்சிகள் மட்டுமே இனி பிரதானமாக எடுக்கப்பட உள்ளன. இதில் ஒரு பாடல் காட்சி கோவில் திருவிழா பின்னணியில் எடுக்கப்பட உள்ளது.
 
படத்தில் ஒரு முக்கியமான திருவிழா பாடல் இருப்பதாகவும், அதற்கு தான் கோவில் செட் போடப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
 
இதற்காக சென்னை பின்னி மில்லில் பிரமாண்ட கோவில் அரங்கு அமைக்கப்படுகிறது. படத்தை விரைவாக முடித்து, 2017 பொங்கலுக்கு வெளியிட உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்