பிகில்' - தீபாவளி ரிலீஸ் டென்ஷன் ஒருபக்கம் இருந்தாலும், அதையெல்லாம் அசால்டாக எதிர்கொண்டு வரும் அர்ச்சனா கல்பாத்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள், விஜய் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பிகில் படத்தின் அப்டேட்டுகளை கேட்டு அன்பு தொல்லை செய்யும் ரசிகர்களை ஒருபோதும் முகம் சுளிக்காமல் , சலித்துக்கொள்ளாமல் அவர்கள் எதிர்பார்ப்பதை அடிக்கடி ட்ரீட்டாக கொடுத்து வருகிறார். இதனாலே பிகில் ரசிகர்கள் "அர்ச்சு அக்கா" என செல்லமாக அழைப்பார்கள்.