அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகையான நிகாரிகா கொணிடில்லாவை விஜய் தேவரகொண்டா திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது. நிகாரிகா தமிழில் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சூரியகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நிகாரிகா நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நிகாரிகா திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் இதுபற்றி மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தினர் எந்த ஒரு அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை.