நரேந்திர மோடி, ஜெயலலிதா வெற்றி - விஜய் அறிக்கை

சனி, 17 மே 2014 (11:58 IST)
தேசிய அளவில் நரேந்திர மோடியும், மாநில அளவில் ஜெயலலிதாவும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை -
 
என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கு வணக்கம். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் இந்திய அளவில் ஓர் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய நரேந்திர மோடிக்கும், தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக அளவில் மாபெரும் சக்தியாக திகழும், இந்த இரு தலைவர்களும் உலக அளவில் இந்தியாவை வல்லரசு நாடாகவும், இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் மாற்றிக் காட்டுவார்கள் என்ற கோடானுகோடி மக்களின் நம்பிக்கையில் நானும் ஒருவனாக இந்த வெற்றியை எண்ணி சந்தோஷமடைகிறேன்.
 
- இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்