சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் தமிழில் ஹிட். ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் மெகா ஹிட். பிச்சைக்காரனை இந்தியில் ரீமேக் செய்ய முன்னணி நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆனால், இந்தி ரீமேக்கை இயக்க சசி தயாராகயில்லை.
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் தயாரிப்பாளர், நடிகர் என மேலும் இரு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். அவர் நடித்த சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களும் முதலுக்கு மோசம் செய்யவில்லை. விரைவில் சைத்தான், எமன் ஆகிய படங்கள் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாக உள்ளன. அத்துடன் படம் இயக்கவும் தயாராகி வருகிறார்.