செக்கெண்ட் இன்னிங்சுக்கு ரெடியான ஸ்ரீ திவ்யா: கைக்கொடுக்கும் டபுள் ஹீரோஸ்!

திங்கள், 16 செப்டம்பர் 2019 (09:15 IST)
நடிகை ஸ்ரீ திவ்யா, விஜய் ஆண்டனி, அல்லு சிரிஷ் இணைந்து நடிக்கும் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். 
 
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஸ்ரீ திவ்யா. அந்த படத்தை தொடர்ந்து கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெளிப்படுத்தியவர், மார்டனாக நடித்தும் ரசிகர்களை கவர்ந்தார். 
 
கடைசியாக ஸ்ரீ திவ்யா நடித்த படம் சங்கிலி புங்கிலி கதவ திற. இந்நிலையில் என்ன காரணமோ தெரியவில்லை கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பட வாய்ப்புகளும் இன்றி இருக்கிறார். இந்த காத்திருப்புக்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது. 
ஆம், எஸ்.டி.விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய் ஆண்டனி, அல்லு சிரிஷ் நடிக்கின்றனர். இந்த படத்தில்தான் ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியுள்ளார். 
 
இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் படம் ரிலீசாகும் என தகவ்ல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்