சிகாமணிக்காக பாடிய விஜய் ஆண்டனி

புதன், 16 ஏப்ரல் 2014 (20:04 IST)
பரத் நடிக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்துக்காக ஒரு பாடல் பாடினார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
 
பிரியாணி படத்தில் யுவன் கேட்டுக் கொண்டதால் ஒரு பாடலின் சில வரிகளை விஜய் ஆண்டனி பாடினார். அது முழுப் பாடல் அல்ல. இந்நிலையில் பரத்தின் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்துக்காக ஒரு பாடல் பாடித் தரும்படி அப்படத்தின் இசையமைப்பாளர் சைமன் விஜய் ஆண்டனியிடம் கேட்டார். அதற்கு மறுப்பு எதுவும் கூறாமல் உடனே பாடித் தந்தார் விஜய் ஆண்டனி.
 
இது குறித்து பேசிய சைமன், அதுவொரு குத்துப் பாடல். விஜய் ஆண்டனியின் குரல் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் கேட்டேன். உடனே ஒப்புக் கொண்டு பாடித் தந்தார். அவருடன் இணைந்து சுனிதா சௌகான் பாடியிருக்கிறார். விஜய் ஆண்டனி பாடியிருக்கும் முதல் முழுப்பாடல் இது என்றார்.
 
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணியில் நந்திதா ஹீரோயின். பாலசந்தரின் கவிதாலயா படத்தை தயாரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்