விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' சென்சார் தகவல்கள்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (19:23 IST)
நடிகர், இசையமைப்பாளர் என இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக பயணம் செய்து வருபவர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. 'நான்' படம் தொடங்கி தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருபவர். குறிப்பாக இவருடைய பிச்சைக்காரன் திரைப்படம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது



 


இந்த நிலையில் விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் 'அண்ணாதுரை. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அண்ணாதுரை படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'UA'  சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் முடிவடைந்ததை அடுத்து ஒருசில நாட்களில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

விஜய் ஆண்டனி, டயானா, மஹிமா, ராதாரவி, காளி வெங்கட், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஜி.சீனிவாசன் இயக்கியுள்ளார். இந்த படத்தை ராதிகா சரத்குமாருடன் இணைந்து விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார்/

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்