இந்த தீபாவளி தல தளபதி பர்ஸ்ட் லுக் தீபாவளி!!!

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (17:49 IST)
இந்த தீபாவளி தல தளபதி தீபாவளியா?? அது எப்படி என்று ரொம்ப யோசிக்காமல் கீழே படியுங்கள். 


 
 
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோரை வைத்து பரதன் 'விஜய் 60' படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்துவிட்டது. மறுபக்கம் சிறுத்தை சிவா இயக்கி வரும்  'தல 57' படத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
இந்த படத்தில் அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் அஜீத்தின் பார்ட்னராக நடிக்கிறார். 
 
இரண்டு படங்களுமே இந்த தீபாவளிக்கு ரிலீஸாக வாய்ப்பு இல்லை. ஆனால் தல, தளபதி படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் தலைப்பு ஆகியவை தீபாவளி அன்று வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது. 
 
எதுக்கும் தீபாவளி வர காத்திருப்போம்....

வெப்துனியாவைப் படிக்கவும்