‘விஜய் 62’ ஷூட்டிங் எப்போது?

செவ்வாய், 27 ஜூன் 2017 (11:54 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தேதி தெரியவந்துள்ளது.




அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 61வது படத்துக்கு, ‘மெர்சல்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, 62 படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘விஜய் 62’ படத்தை இயக்குவது அவர்தான் என்று முடிவாகிவிட்டது. ஏற்கெனவே ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களில் இணைந்துள்ள இந்தக் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறது. தற்போது மகேஷ் பாபு நடிப்பில் ‘ஸ்பைடர்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இந்தப் படம், செப்டம்பரில் ரிலீஸ் ஆகிறது. அந்தப் படத்தின் ரிலீஸ் முடிந்ததும், அக்டோபர் மாதத்தில் ‘விஜய் 62’ ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. தற்போது ‘மெர்சல்’ படத்தில் நடித்துவரும் விஜய், அது முடிந்ததும் சிறிய ஓய்வுக்குப் பிறகு ‘விஜய் 62’ ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்