தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

Mahendran

செவ்வாய், 7 ஏப்ரல் 2026 (17:49 IST)
தனுஷின் தயாரிப்பில் நானும் ரவுடிதான் படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இன்னும் சொல்லப்போனால் அவர் இயக்கிய சில படங்களில் நானும் ரவுடிதான் படம் மட்டுமே சூப்பர் ஹிட். இந்த படத்தை தனுஷ் தயாரித்த போது சொன்னதை விட அதிக செலவு ஆனது. அதோடு,  ஷூட்டிங்கில் நயன்தாராவோடு விக்னேஷ் சிவன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார் என்கிற செய்தி தனுஷுக்கு போக கோபமடைந்த தனுஷ் இந்த படத்திற்கு இதுக்கு மேல நான் செலவு செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதன்பின் நயன்தாராவே செலவு செய்து படத்தை முடிக்க உதவி செய்தார்..

அந்தப் படம் ஹிட் அடித்தும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரையும் சந்திப்பதையே தனுஷ் தவிர்த்து விட்டார். அதோடு அவர்களுடனான உறவையும் முறித்துக் கொண்டார்.

இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விக்னேஷ் சிவன் என் தந்தை இறந்த அதே தேதியில்தான் தனுஷின் பிறந்தநாள். எனவே அவரை என் அப்பாவாகவே பார்க்கிறேன்.. வேலை இல்லா பட்டதாரி படம் உருவானபோது அவரிடம் இரண்டு வருடங்கள் இருந்தேன். அவர் இல்லை என்றால் நான் இல்லை’ என பேசினார்.

மேலும் ‘தனுஷை போல ஒருவரை பார்ப்பது கடினம்.. அவரை போல ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.. அவர் கடினமாக உழைப்பதை பார்த்து அவருக்கு ஏதாவது ஆகிவிடுவோமா என பயந்திருக்கிறேன். அதிகாலை 4,5 மணி வரை வேலை செய்வார். 5 மணிக்கு படுக்கப் போகும் போது 6:30 மணிக்கு எழுப்ப சொல்லிவிட்டு படுப்பார்.. ஆனால் அவரே 6:30 மணிக்கு எழுந்து என்னை எழுப்புவார்.. என் செல்போனில் அவரின் எண்ணெ மிடாஸ் என்றுதான் பதிவு செய்திருந்தேன்.. அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான்’ என விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்