விக்னேஷ் சிவனிடம் அஜித் 62 படம் பற்றி கேள்வி… அதற்கு அவர் சொன்ன பதில்!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (07:51 IST)
அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க,விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்துக்காக விக்னேஷ் சிவன் உருவாக்கிய திரைக்கதை லைகா மற்றும் அஜித் தரப்புக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் அந்த படத்தில் இருந்து அவரை நீக்கி மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்து ப்ரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் போதைப் பொருள் விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் அஜித் 62 படம் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த விக்னேஷ் சிவன் “இந்த நிகழ்ச்சிக்கு சம்மந்தமில்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்