விரைவில் வெளியாகிறது வேலு பிரபாகரனின் இதுவும் காதல்

வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (16:10 IST)
சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதில் வேலு பிரபாகரன் கெட்டிக்காரர். கடவுள் மறுப்பு, ரஜினி எதிர்ப்பு என்றிருந்தவர் திடீரென மனம் மாறி ரஜினி புகழ் பாடியதும், கடவுள் மறுப்பை கைவிட்டு காம ஈர்ப்பு படம் எடுத்ததும் வரலாறு. 
 
மறைச்சாதாம்பா வெறிக்கப் பார்க்கிறாங்க என்று அரை நிர்வாணமாக நடிகைகளை நடிக்கவிட்டு இவர் எடுத்தப் படம், காதல் அரங்கம். படத்தின் வெளிப்படையான காட்சிக்காகவே படம் ஓடியது. அதன் இரண்டாம் பாகமாக, இதுவும் காதல் என்ற படத்தை சானியா தாராவை வைத்து எடுத்தார். 
 
பாதி படம் முடிந்த பிறகுதான் வேலு பிரபாகரனின் முந்தையப் படம் குறித்து தெரியவந்து தெறித்து ஓடினார் சானியா. பிறகு வேறொரு நடிகையை வைத்து படத்தை முடித்தவர் வெற்றிகரமாக அதனை வேறொருவருக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
 
விரைவில் இதுவும் காதல் திரைக்கு வருகிறது என்பதுதான் ஜொள்ளர்களுக்கான இனிப்பு செய்தி.

வெப்துனியாவைப் படிக்கவும்