மலையாளத்தில் பிருத்விராஜ் ஜோடியான வேதிகா

வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (14:43 IST)
தமிழில் மார்க்கெட் இல்லாத நடிகர்களை தயக்கமின்றி அரவணைக்கிறது மலையாள சினிமா. ப்ரியா ஆனந்தை தொடர்ந்து வேதிகாவும் மலையாளத்தில் பிருத்விராஜுடன் நடிக்கிறார்.


 
 
பிருத்விராஜ் நடித்த காவியத்தலைவனில் வேதிகாவும் நடித்திருந்தார். அதில் பிருத்விராஜை வெறுக்கிற வேடம். மலையாளப் படத்தில் பிருத்விராஜை காதலிக்கிற வேடம்.
 
சுஜித் வாசுதேவ் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிக்கும் ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ் படத்தில் வேதிகாதான் நாயகி. வித்தியாசமான கதைக்களத்தில் இந்தப் படம் தயாராகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்