அல்லு அர்ஜுன் படத்தில் முக்கிய வேடத்தில் தமிழ் நடிகை!

வியாழன், 4 மார்ச் 2021 (07:49 IST)
அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதையடுத்து அல்லு அர்ஜுன் கொரட்டலா சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
அந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் அரசியல் வாதியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வரலட்சுமி ஏற்கனவே சர்கார் படத்தில் அரசியல் வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்