ஏய் நீ யாருடி... வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனின் குடும்பி பிடி சண்டை - லைவ் பேட்டி வீடியோ

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (10:38 IST)
வனிதா மற்றும் பீட்டர்பால் மூன்றாம் திருமணம் மற்றும் பீட்டர்பால் முதல் மனைவியின் சர்ச்சை ஆகியவை அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா இருவரும் பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு லைவ் பேட்டி கொடுத்தனர்.

பேட்டியின் ஆரம்பத்திலே ஆங்கரை மரியாதை குறைவாக பேசிய வனிதாவை லட்சுமி ராமகிருஷ்ணன் தட்டி கேட்கிறார். அப்டித்தான் இந்த வாக்குவாதம் ஆரம்பித்தது. பின்னர் வனிதா மிகவும் தரம் கெட்ட வார்த்தைகளால் லட்சுமி ராமகிருஷ்ணனை திட்டுகிறார். "நீ யாரு மொதல்ல, நீ ஏன் இதுல தலையிடற,  உன்ன கிழிச்சு தொங்க விரட்டுருவேன். ஒரு புருஷனை கட்டிக்கிட்டு வாழ்ந்த நீ பெரிய யோக்கியமா...? உன் புருஷன் கேடுகெட்ட வெட்கம் கெட்ட ஜென்மம் என கண்டிப்படி கீழ்த்தரமாக திட்டிவிட்டார் வனிதா.

உடனே லட்சுமி ராமகிருஷ்ணன் ஆங்கரிடம், இந்த மாதிரி குழாயடி சண்டை போடுறவங்க கூடலாம் என்னால் பேசமுடியாது என டீசண்டாக பதிலளித்து முடித்துவிட்டார். ஒரு கட்டத்தில் ஆங்கர் என்ன செய்வதென்றே தெரியாமல் சைலண்டாக ஆகிவிட்டார். இந்த மோசமான வீடியோவை பேட்டி எடுத்த சேனலே வெளியிடவில்லை. ஆனால் வனிதா அதனை வீடியோ ரெகார்ட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கமெண்ட்ஸ் சேக்ஷனை ஆப் செய்துள்ளார். தரம் கேட்ட வனிதாவின் வார்த்தைகள் கேட்டு பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்