கேரளத்து பைங்கிளி... சேச்சி லுக்கில் வாணி போஜன்!

புதன், 4 ஆகஸ்ட் 2021 (13:39 IST)
சீரியல்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிட்சியமானவர் நடிகை வாணி போஜன். இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆகி சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியல் மூலம் பெருமளவில் பேமஸ் ஆனார். 
 
அதன் மூலம் திரைத்துறையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது ஓ மை கடவுளே திரைப்படத்தில் மீரா எனும் இரண்டாவது ஹீரோயின் ரோலில் நடித்து பெயர் பெற்றார். தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

இந்நிலையில் தனது சமூகவலைத்தளத்தில் கேரளா புடவையில் சேச்சி லுக்கில் செம கியூட்டாக இருக்கும் வாணி போஜனை கண்டு ரசிகர்கள் ரசித்து வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்