மகான் படத்தில் நடிக்க வாணி போஜன் ஒப்பந்தமானதாக் அதிகாரப்பூர்வமாக செய்திகள் படக்குழுவால் வெளியிடப்பட்டன.
விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சனத் மற்றும் சிம்ரன் நடிப்பில் இன்று வெளியான மகான் திரைப்படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இது எல்லாவற்றையும் விட பெரிய ஏமாற்றமாக படத்தில் வாணிபோஜனை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு முக்கியமான வேடம் எனவும் படக்குழுவினர் விளம்பரப்படுத்தினர். ஆனால் படத்தில் இன்று ஒரு காட்சியில் கூட வாணிபோஜனைக் காணவில்லை. இது குறித்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள் மீம்ஸ்களாகவும் ட்ரோல்களாகவும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.