வலியவன் - ஆக்ஷனிலிருந்து காதலுக்கு

திங்கள், 24 நவம்பர் 2014 (12:04 IST)
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணனின் அடுத்தப் படம், வலியவன். ஜெய், ஆண்ட்ரியா நடித்து வரும் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹரித்துவார் மற்றும் குலுமணாலியில் நடக்க உள்ளது.
முதல் படத்தில் காதலையும், இரண்டாவது படத்தில் ஆக்ஷனையும் பிரதானமாகச் சொன்ன சரவணன் வலியவனில் மென்மையான காதலை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதையொட்டி ஆக்ஷனும் உள்ளது. 
 
எஸ்.கே.ஸ்டுடியோஸ் சம்பத் தயாரிக்க, டி.இமான் இசையமைக்க படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் சில முக்கியமான காட்சிகளை டெல்லியில் படமாக்கினர்.
 
அடுத்த வருட தொடக்கத்தில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்