'வலிமை’ ஃபர்ஸ்ட்லுக் தேதி குறித்து கசிந்த தகவல்!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (19:11 IST)
தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹேட்ச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில் உள்ளது. இந்த படத்தின் உள்ளூர் படப்பிடிப்பு பிப்ரவரி 15ஆம் தேதி முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் வெளிநாட்டு படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கும் என்றும் போனிகபூர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார் 

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. சரியான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் 'வலிமை’ படத்தை முதலில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் செய்வது என்ற முடிவில் போனிகபூர் உறுதியாக உள்ளார் என்றும் அதன் பின்னர் 15 அல்லது 20 நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இந்த படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்