நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் சிங்கிள் எப்போ?... வெளியான அப்டேட்

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (10:05 IST)
வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீடு அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. இந்த பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாம். கதைக்கு சம்மந்தமே இல்லாத பாடலை வடிவேலுவின் வற்புறுத்தலால்தான் எடுத்தார்களாம்.

இந்நிலையில் இப்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் ஆடியோ உரிமையை திங் மியுசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு பாடியுள்ள முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்