’வா’ படத்துக்கு கிடைத்தது விடியல் - நாளை பர்ஸ்ட் லுக்

வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (15:34 IST)
அருண் விஜய் மற்றும் கார்த்திகா நாயர் நடிப்பில் தயாராகியுள்ள ’வா’ படத்தின் பர்ஸ்ட் லுக்  நாளை வெளியாகவிருக்கிறது.
 
தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே வரிவிலக்கு என்ற, தமிழ் சினிமாவின் அடிப்படை தெரியாமல் பிற மொழிகளில் பெயர் வைத்து, பட வெளியீட்டின் போது, அவசர அவசரமாக கையில் கிடைத்த பெயரை படத்துக்கு வைக்கும் அசட்டுத்தனத்தில் சிக்கிய படங்களில் ஒன்று, டீல். அருண் விஜய், கார்த்திகா நாயர் நடித்த இந்தப் படத்தை சிவஞானம் இயக்கியிருந்தார்.
 

 
படம் தயாராகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. அருண் விஜய்யின் டல் மார்க்கெட் காரணமாகவும், வேறு பணப் பிரச்சனைகள் காரணமாகவும் டீல் வெளியாகவில்லை. ஒருமுறை, படத்தின் பெயரை வா என்று மாற்றி, ரிலீஸுக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அதே வேகத்தில் வா பெட்டிக்குள் போனது.
 
என்னை அறிந்தால் படம், அருண் விஜய்யின் பெயரை துடைத்து பளபளப்பாக்கிய தைரியத்தில் வா படத்தை வெளியிட முன் வந்துள்ளனர். முதல்கட்டமாக படத்தின் இசை உரிமையை சோனி வாங்கியது. நாளை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.
 
வா என்று படத்தின் பெயரை மாற்றி, முன்பு வைத்த டீலை படத்தின் கேப்ஷனாக்கி, வா டீல் என்று படத்தை விளம்பரப்படுத்துகின்றனர். ஆனால், படத்தின் பெயர் வா டீல் அல்ல, 'வா' மட்டுமே.

வெப்துனியாவைப் படிக்கவும்