உத்தம வில்லன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்திலும் பிரச்சனை

சனி, 30 மே 2015 (12:03 IST)
உத்தம வில்லன் படம் திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுவிட்டது. இருந்தும் அதன் பிரச்சனைகள் மட்டும் இன்னும் உயிர்ப்போடு உள்ளன. 
 
எந்தப் படமாக இருந்தாலும் லேபில் தடையில்லா சான்றிதழ் வாங்கினால் மட்டுமே பிரச்சனையில்லாமல் திரையிட முடியும். உத்தம வில்லன் படவேலைகள் நடந்த ஜெமினி லேப் உத்தம வில்லனுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை. அந்த சான்றிதழ் இல்லாமலே படம் திரைக்கு வந்தது. படம் ஓடி முடிந்து பெட்டிக்கும் திரும்பிவிட்டது. ஆனால் பிரச்சனைகள் முடியவில்லை.
 
லேபின் தடையில்லா சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கிய தனியார் தொலைக்காட்சியின் கைகளுக்கு படத்தை ஒளிபரப்பும் அனுமதி சான்றிதழ் இன்னும் தரப்படவில்லை. லிங்குசாமி மீதமுள்ள கடன்களை அடைத்தால் மட்டுமே லேப் தடையில்லா சான்றை தரும், தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் படத்தை ஒளிபரப்பும் அனுமதி சான்றிதழ் கிடைக்கும். இந்த காலதாமதத்தால் தொலைக்காட்சி நிறுவனம் அதிருப்தியில் உள்ளது. 
 
ஓஹோ என்றிருந்த திருப்பதி பிரதர்ஸை உத்தம வில்லன் என்ற ஒரே படம் இப்படி கவுத்துவிட்டதே.

வெப்துனியாவைப் படிக்கவும்