உறியடி... பார்க்க வேண்டிய படம்

சனி, 28 மே 2016 (13:16 IST)
சில படங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி நம்மை கவரும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று, நேற்று வெளியான உறியடி. 


 
 
மைம் கோபி தவிர இந்தப் படத்தில் நடித்தவர்கள், உருவாக்கியவர்கள் அனைவரும் புதிது. தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் நான்கு மாணவர்கள், மதுவும், மாதுவுமாக இருக்கும் ஊர் பெரியவரின் மகன். 
 
இவர்கள் இருவருக்குமிடையேயான உரசல். தாபா நடத்தும் உள்ளூர் முதலாளி சாதியை வைத்து அரசியல் செய்யும் சாணக்கியத்தனம் என்று உறியடி பயணிக்கிறது.
 
சாதி அரசியல் எப்படி சமூகத்தில் வேர் பிடிக்கிறது, சாதி கலவரத்தை தூண்டி எப்படி அரசியல் ஆதாயம் அடைகிறார்கள், சாதி அரசியல் எப்படி மாணவர்களிடையே திணிக்கப்படுகிறது என்பதை உயிரோட்டமாக சொல்கிறது உறியடி. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம். 
 
விஜயகுமார் என்ற இளைஞர் படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார். ரசிகர்கள் இதுபோன்ற முயற்சிகளை திரையரங்கில் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்.
 
உறியடி நமக்கான படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்