உலிடவரு கண்டந்தே ரீமேக்கில் ஷ்ரத்தா

வெள்ளி, 27 மே 2016 (18:07 IST)
கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், உலிடவரு கண்டந்தே. அறிமுக இயக்குனர் இயக்கி, நடித்த இந்தப் படம் அதன் திரைக்கதைக்காக பாராட்டும், விருதும் பெற்றது.


 

 
அதனை மிஷ்கினின் உதவி இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் தமிழில் ரீமேக் செய்கிறார்.
 
இந்த ரீமேக்கில் நிவின் பாலி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் வரும் பிரதான நிருபர் வேடத்துக்கு ஆடிஷன் நடத்தினர். பலரை முயன்றுப் பார்த்து இறுதியில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் கன்னடத்தில் வெளியான பவன் குமாரின் யு - டர்ன் படத்தில் நடித்தவர்.
 
பவன் குமாரின் முதல் படம் லுnசியாவும், உலிடவரு கண்டந்தே படத்தைப் போல் நான் லீனியர் திரைக்கதையில் உருவானதே. அந்தப் படம் சித்தார்த் நடிப்பில் எனக்குள் ஒருவன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. யு - டர்ன் படத்தையும் தமிழில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்