உத்தா பஞ்சாப் படத்துக்கு தடைகோரி வழக்கு

வியாழன், 16 ஜூன் 2016 (11:25 IST)
தணிக்கை வாரியத்தின் கடுமையான நடவடிக்கையிலிருந்து உத்தா பாஞ்சாப் படம் தப்பித்தாலும், அவ்வளவு எளிதில் அடிப்படைவாதிகள் அந்தப் படத்தை திரையிட சம்மதிப்பார்கள் என தெரியவில்லை.


 


உத்தா பாஞ்சாப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று என்ஜிஓ ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.
 
பஞ்சாபில் இயங்கிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம், மனித உரிமைகள் விழிப்புணர்வு கூட்டமைப்பு. இந்த நிறுவனம், உத்தா பஞ்சாப் படத்தை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 
 
அதற்கு அவ்வமைப்பு கூறியிருக்கும் காரணங்கள் விசித்திரமானது.
 
விவசாய மாநிலமான பஞ்சாபை இப்படம் தவறாக சித்தரித்துள்ளது என்று கூறி தடை கேட்டுள்ளனர். மேலும், தணிக்கை வாரியத்தின் முடிவில் மும்பை உயர்நீதிமன்றம் தலையிட்டிருக்கக் கூடாது எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...

வெப்துனியாவைப் படிக்கவும்