எழில் இயக்கிவரும் சரவணன் இருக்க பயமேன் படம் முக்கால்வாசி முடிந்துள்ளது. கௌரவ் இயக்கும் படம் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி பார்த்திபனுடன் இணைந்து நடிக்கும் படம் தொடங்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கும் இந்தப் படத்துக்கு, பொதுவாக என் மனசு தங்கம் என்று பெயரிட்டுள்ளனர்.