திரைப்படங்களுக்கு வரிவிலக்கு விவகாரம் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (11:14 IST)
திரைப்படங்களுக்கு 30 சதவீத வரிச்சலுகை என்பதை ஆளும்கட்சி தனது விருப்பத்துக்கேற்ப பயன்படுத்துகிறது. எதிர்கட்சியை சேர்ந்தவரின் படம் என்றால் வரி விலக்கு நிச்சயம் கிடைக்காது என்பதே நிலைமை.
 
உதயநிதி தயாரித்த 7 -ஆம் அறிவு படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை அளிக்கவில்லை. அதனை அடுத்து அவர் நீதிமன்றம் சென்றார். அங்கு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பிறகு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
 
"திரைப்படத் தயாரிப்பாளர் வரி விலக்கு கோரி விண்ணப்பம் தாக்கல் செய்த 2 வாரங்களுக்குள் பார்வையிடும் குழுவினர் படத்தை திரையிடும் தேதியை அரசு சார்பில் தயாரிப்பாளருக்கு தெரிவிக்கவேண்டும். அந்த தேதியில் இருந்து அடுத்த 2 வாரங்களுக்குள் தயாரிப்பாளர் பார்வையிடும் குழுவுக்கு படத்தை திரையிடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். பின்னர் படத்தை பார்த்த தேதியில் இருந்து சம்பந்தப்பட்ட படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதா? இல்லையா? என்பதை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு தயாரிப்பாளருக்கு அறிவிக்கவேண்டும்."       
 
இவ்வாறு நீதிபதிகளின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்