யு சான்றிதழ்... தப்பிப் பிழைத்த கத்தி சண்டை

திங்கள், 7 நவம்பர் 2016 (12:39 IST)
சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் கத்தி சண்டை படத்துக்கு தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

 
 
யு சான்றிதழ் கிடைத்தால்தான் வரிவிலக்கு என்பதால் படம் எடுப்பவர்கள் பதட்டத்துடன்தான் படத்தை தணிக்கைக்கு அனுப்புகின்றனர். சுராஜ் படத்தில் அடிதடி அதிகமாக இருக்கும், கத்தி சண்டைக்கு யு கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. 
 
இந்நிலையில், தணிக்கையில் ஒரு சில காட்சிகளை மட்டும் நீக்கச் சொல்லி, யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். 
 
நவம்பர் 18 படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்