'யு' சான்றிதழ் பெற்ற அஜித்தின் விவேகம்!

திங்கள், 31 ஜூலை 2017 (15:31 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ள இதில், அக்ஷரா ஹாசன்,  விவேக் ஓபராய் இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

 
சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்தப் படம்  ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தை, தணிக்கை குழு சோதனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டிருந்தது. படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு `யு' சான்றிதழை வழங்கி தல ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும்  இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இது படக்குழுவுக்கு கிடைத்த அடுத்த வெற்றி என்று தான் கூற வேண்டும். 
 
படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது முதல் தல ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை கொண்டாடி  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற  ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்