இப்படத்தை ரஜினியின் மருமுகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பணிகளை தொடங்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்து, அதற்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
திரிஷா சினிமாவுக்குள் நுழைந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை முன்னணி நடிகரான அஜித், கமல், விஜய் போன்றவர்களுடன் நடித்துள்ளார். ஆனால் இதுவரை ரஜினியுடன் ஜோடி சேர்ந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி தற்போது ‘2.ஓ’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு பா.ரஞ்சித் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. மேலும், இப்படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் கூடவே நடந்து வருகிறது.