தமிழில் திரிஷா நடித்த வேடத்தில் மீண்டும் திரிஷாவையே நடிக்க வைக்க இயக்குனர் பிரேம் குமார் விரும்பினாராம். ஆனால் தயாரிப்பாளர் தில்ராஜுவோ திரிஷாவை விட சமந்தாவுக்கே தெலுங்கில் மார்க்கெட் அதிகம் என்று கூறி சமந்தாவை நடிக்க வைக்கலாம் என்று விரும்புகிறாராம். இதனால் தெலுங்கு 96 படத்தை கைப்பற்றுவது யார் என்பதில் திரிஷாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை கைப்பற்றினால் தெலுங்கில் பழைய படி முன்னணி நடிகையாகி விடலாம் என்று திரிஷா நம்பிக்கையில் உள்ளாராம். சமந்தாவும் இந்த படத்தில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளார். இதனால் த்ரிஷா சமந்தா இடையே 96 படத்தை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.