டண்டணக்கா பாடல் - ஒரு கோடி நஷ்டஈடு கேட்கும் டி.ஆர்.

திங்கள், 20 ஏப்ரல் 2015 (11:38 IST)
ரோமியோ ஜுலியட் படத்தில் டண்டணக்கா எனத் தொடங்கும் பாடல் டி.இமான் இசையில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை டி.ராஜேந்தருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக வைத்ததாக படத்தின் இயக்குனர் லக்ஷ்மண் கூறியிருந்தார்.
 
ஆனால், இந்தப் பாடலை வைத்து இணையம் முழுவதும் டி.ஆரை கலாய்த்தனர். அதனால் கடுப்புற்ற டி.ஆர். பாடலை திரும்பப் பெறும்படி நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், டி.ராஜேந்தர் இப்படக்குழுவினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது சம்மந்தமாக இப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் அனிருத், பாடலாசிரியர் ரோகேஷ் ஆகிய நான்கு பேருக்கும் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
டி.ஆர்.சார்பாக அவரது வக்கீல் அனுப்பிய நோட்டீஸில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ரோமியோ ஜூலியட் படத்தில் இடம்பெறும் டண்டணக்கா பாடலை எனது கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை பின்னணியில் ஒலிக்க செய்திருக்கிறார்கள். இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். இந்த பாட்டு, பதிவு செய்யப்படும் காட்சிகள் யூடியூப்பிலும், சாட்டிலைட் சானலிலும் வெளியிடப்பட்டது. 
 
இதற்காக எனது கட்சிக்காரருக்கு ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும். மேலும் யூடியூப், தனியார் சாட்டிலைட் சானல் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும் எந்த தளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூபாய் 1000 தரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்