நாளை வெளியாகும் பைசா

வியாழன், 30 ஜூன் 2016 (11:27 IST)
பசங்க, கோலிசோடா உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீராம் தனி நாயகனாக நடித்துள்ள படம் பைசா. இந்தப் படமும் நாளை வெளியாகிறது.


 
 
படம் குறித்து பேசிய ஸ்ரீராம், இதில் குப்பை பொறுக்கிறவனாக வருகிறேன். இந்த கதைக்களத்தில் இதுவரை எந்தப் படமும் வந்ததில்லை. நாம் தூக்கிப் போடுகிற குப்பைகள்தான் குப்பை பொறுக்கிறர்களுக்கு ஆதாரமாக இருக்கிறது என்றார். 
 
படத்தின் கதை பற்றி கேட்டதற்கு, பல பேரு பல தொழில்ல பணம் போட்டு வேஸ்டா போயிருக்காங்க ஆனா குப்பை பொறுக்குறவங்க வேஸ்டையே முதலீடா போட்டு பெரிய ஆளாயிருக்காங்கன்னு படத்துல ஒரு வசனம் வரும். அதுதான் படத்தோட கதையே என்றார். 

விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய மஜீத் பைசாவை இயக்கியிருக்கிறார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

வெப்துனியாவைப் படிக்கவும்