இன்று வெளியாகும் மாதவனின் இறுதிச்சுற்று ட்ரெய்லர்

வியாழன், 17 டிசம்பர் 2015 (14:21 IST)
மாதவன் பாக்ஸராக நடித்துள்ள இறுதிச்சுற்று படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது.


 

வேட்டை படத்துக்குப் பிறகு விடுமுறை எடுத்துக் கொண்ட மாதவன் எந்தத் தமிழப் படத்திலும் நடிக்கவில்லை. யுஎஸ் சென்று கடுமையான பயிற்சி எடுத்து இறுதிச்சுற்று படத்தில் மட்டும் நடித்தார். மணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குனர் சுதா கே.பிரசாத் படத்தை இயக்கியுள்ளார். இந்தியில் இப்படம் சாலா காதூஸ் என்ற பெயரில் வெளியாகிறது.

இறுதிச்சுற்றின் ட்ரெய்லரை இன்று சென்னையில் வெளியிடுகின்றனர். சிவ கார்த்திகேயன் இந்த ட்ரெய்லரை வெளியிடுகிறார். ஜனவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்