துணிவு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் பற்றி பேசிய மஞ்சு வாரியர்!

சனி, 14 ஜனவரி 2023 (09:00 IST)
துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது.

2014ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் விஜய் – அஜித் படங்கள் நேற்று முன் தினம் ஒரே நாளில் வெளியாகின. இதில் முதல் நாளில் துணிவு படம், வாரிசு திரைப்படத்தை விட பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் முதல் நாளில் வாரிசு திரைப்படத்தை விட துணிவு படத்துக்குக் கூடுதல் வசூல் கிடைத்தது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள மஞ்சுவாரியர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “இந்த படத்தில் நீக்கப்பட்ட ஒரு சில காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் போது இடம்பெறும் என நினைக்கிறேன். இது சம்மந்தமாக இயக்குனர் வினோத்திடம் நான் பேசினேன்” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்