துணை முதல்வர் விழாவில் முன்னாள் நாயகிகள்

சனி, 29 நவம்பர் 2014 (10:25 IST)
விவேகானந்தன் இயக்கியிருக்கும் படம், துணை முதல்வர். இதன் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அரசியல் படமான இதில் பாக்யராஜும், ஜெயராமும் நாயகர்களாக நடித்துள்ளனர். பாக்யராஜுக்கு ஜோடி ஸ்வேதா மேனன்.
பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாக்யராஜுடன் நடித்த முன்னாள் மற்றும் இந்நாள் நடிகைகள் கலந்து கொண்டனர். மீனா, கோவை சரளா, ரேகா, சுகாசினி, ராதிகா, பூர்ணிமா, ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி, ரோகிணி மற்றும் ஊர்வசி. இந்த பத்து பேரும் சேர்ந்து பாடல்கள் சிடியை வெளியிட்டனர்.
 
விழாவில் பாண்டியராஜன், பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்