தொடரிக்கு யு சான்றிதழ்

திங்கள், 12 செப்டம்பர் 2016 (18:15 IST)
செப்டம்பர் மாதம் வெளியான குற்றமே தண்டனை, கிடாரி, இருமுகன் படங்களுக்கு யு சான்றிதழ் கிடைக்காததால் 30 சதவீத வரிச்சலுகையை இழந்தன. இது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கவலையை தந்தது. இந்நிலையில், வீர சிவாஜி படம் யு சான்றிதழ் பெற்றது.


 

 
அதனைத் தொடர்ந்து தனுஷின் தொடரி படமும் யு சான்றிதழ் பெற்றுள்ளது.
 
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தொடரி படம் முழுக்க ரயிலில் படமாக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு. படத்தின் சில ஏரியாக்கள் விற்பனையாகாததால் படவெளியீடு தள்ளிப் போனது.
 
இந்நிலையில் படத்தை தணிக்கைக்குழுவினருக்கு திரையிட்டு காட்டினர். படத்துக்கு அவர்கள் யு சான்றிதழ் தந்தனர். இது படக்குழுவை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. விரைவில் படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்