மெர்சல் படத்தில் லீக்கான விஜய் கதாபாத்திரத்தின் பெயர் இதுதான்!

வியாழன், 6 ஜூலை 2017 (15:51 IST)
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் “மெர்சல்” படத்திற்கு ரசிகர்களிடயே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. விஜய்யும் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர்.

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. அப்பா – இரு மகன்கள் என மூன்று வேடங்களில் விஜய் நடிக்கும்  இந்தப் படத்தில், அப்பா விஜய் பண்ணையாராகவும், ஒரு மகன் டாக்டராகவும், இன்னொரு மகன் மேஜிக் நிபுணராகவும் நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால் தற்போது அரசியல்வாதியாக நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
தற்போது மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் “மாறன்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்