அமெரிக்கா செய்துள்ள துரோகம் இது - ஹாலிவுட் நடிகை

புதன், 25 ஆகஸ்ட் 2021 (20:29 IST)
அமெரிக்க நாட்டுக் குடிமகள் என்று கூற வெட்படுவதாக பிரபல ஏஞ்சலினா ஜூலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டு படைகள் அந்நாட்டு அதிபர் ஜோ பிடன் தேர்தல் வாக்குறுதியின்படி ஆப்கானிஸ்தான் நாட்டைவிட்டுவெளியேறி வருகின்றனர்.

எனவே, பழமைவாத  தாலிபான்கள்ஆப்கானிஸ்தானை  கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டிலிருந்து மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு விமானத்தில் செல்ல விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்துக் கவலை தெரிவித்து, தனது கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

ஆப்கானைவிட்டு அமெரிக்க படைகள் வெளியேறிய 10 தினங்களிலெயே தாலிபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானை இந்த நிலைக்கு ஏன் அமெரிக்கா தள்ள வேண்டும்?  இத்தனை ஆண்டுகளாக நம்மை நம்பிய ஆப்கானிஸ்தான் அரசை பாதியில் கைவிட்டது துரோகமாகும். அதேசமயம் அமெரிக்க நாட்டின் குடிமகள் என சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமீபத்தில் ஐநா கூறியது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்