டாஸ்மாக் கடைகளை மூட வருகிறது திறப்பு விழா

வியாழன், 4 மே 2017 (17:06 IST)
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டத்தை வலியுறுத்தி திறப்பு விழா என்ற படம் உருவாகி வருகிறது.


 

 
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் போராட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை மையமாக வைத்து திறப்பு விழா என்ற தலைப்பில் படம் உருவாகி வருகிறது.
 
இந்த படத்தில் காதல், காமெடி, என்ற கலவையுடன் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான மக்கள் போராட்டத்தையும் வெளிபடுத்தியுள்ளனர். டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா போடும் திரைப்படத்திற்கு திறப்பு விழா என பெயரிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்