தெறி இந்தி ரீமேக்கில் ஷாருக்கான்?

செவ்வாய், 21 ஜூன் 2016 (17:41 IST)
தெறி படத்தின் வெற்றி இந்திப்பட நடிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முக்கியமாக ஷாருக்கானை தெறி ரீமேக்கில் நடிக்கக் கேட்டிருக்கிறார், இயக்குனர் ரோஹித் ஷெட்டி.


 
 
ஷாருக்கானை வைத்து சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே படங்களை இயக்கியவர் ரோஹித் ஷெட்டி. இவர்தான் அஜய் தேவ்கானை வைத்து சிங்கம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ததும். 
 
கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த தில்வாலே தோல்வியடைந்ததால் பாதுகாப்பாக ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார் ரோஹித். தெறி அதற்கு சரியாக இருக்கும் என்பது அவரது தேர்வு. தெறி இந்தி ரீமேக்கில் நடிக்க அவர் ஷாருக்கானை கேட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் தெறி இந்தி ரீமேக்கில் யார் நடிக்கிறார் என்பது முடிவாகிவிடும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்