24 படம் வெளியான மறுநாளே அப்படத்தின் திருட்டு டிவிடி வெளியானது. அந்த டிவிடி பெங்களூருவில் உள்ள திரையரங்கில் வைத்து எடுக்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்நிலையில் சென்ற சனிக்கிழமை வெளியான பென்சில் படத்தின் திருட்டு டிவிடியும் மறுநாளே வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்தது. படத்தின் நாயகன் ஜீ.வி.பிரகாஷ் கமிஷனர் அலுவலகம் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார்.
பக்கத்து மாநிலம் கேரளாவில் இதுபோன்று நடப்பதில்லை. அங்கு திரையரங்குகளில் தமிழகத்தைப் போல் கட்டண கொள்ளையும், பார்க்கிங் கொள்ளையும் இல்லை என்பது முக்கியமானது. கேரளாவை திருட்டு டிவிடி விஷயத்தில் உதாரணம் காட்டுகிறவர்கள் இதையும் கணக்கில் கொள்வது அவசியம்.